அபுதாபியில் 50 வயது இந்திய ஆசிரியர் கொரோனா தொற்றால் மரணம்

 

அபுதாபியில் 50 வயது இந்திய ஆசிரியர் கொரோனா தொற்றால் மரணம்

துபாய்: 50 வயது கொண்ட இந்திய ஆசிரியர் கொரோனா வைரஸ் காரணமாக அபுதாபியில் இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அபுதாபியில் உள்ள சன்ரைஸ் பள்ளியில் அனில் குமார் என்ற இந்தியர் இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர் இறந்தார். அவருக்கு கடந்த மே 7 அன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அனில் குமாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி ரஜினி அதே சன்ரைஸ் பள்ளியில் கணித பாடத்தை மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்.

அபுதாபியில் 50 வயது இந்திய ஆசிரியர் கொரோனா தொற்றால் மரணம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனாவின் வுஹான் நகரில் இருந்து கொரோனா நோய்த் தொற்று முதன்முதலில் பரவத் தொடங்கியது. இந்த நோய்த் தொற்று காரணமாக இதுவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கிட்டத்தட்ட 30,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் இதுவரை கொரோனாவால் 245 பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் இதுவரை உலகம் முழுவதும் 3,45,000 மக்களைக் கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.