நிறுத்தப்படுகிறதா ரயில் சேவை? இந்தியன் ரயில்வே விளக்கம்!

 

நிறுத்தப்படுகிறதா ரயில் சேவை?  இந்தியன் ரயில்வே விளக்கம்!

கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய மாநில அரசுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக பின்பற்றி வருகின்றன. சில இடங்களில் ஊரடங்கு உத்தரவும் போடப்பட்டு வருகிறது. ஊரடங்கு அச்சத்தால் மக்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

நிறுத்தப்படுகிறதா ரயில் சேவை?  இந்தியன் ரயில்வே விளக்கம்!

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் ரயில் சேவை நிறுத்தப்படலாம் என கூறப்படுவதால், ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் ரயில் சேவை நிறுத்தப்படுமா என்பது குறித்து ரயில்வே வாரிய தலைவர் விளக்கம் அளித்துள்ளார். ரயில்களை நிறுத்தும் திட்டமிட்டம் இல்லை. ரயில் சேவை நிறுத்தப்படலாம் என மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தேவைப்பட்டால் கூடுதலாக ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் ரயில் இயக்க முடிவு செய்திருக்கிறோம். ரயில்களில் பயணிக்க கொரோனா நெகட்டிவ் சான்று தேவை என பரவும் தகவல் வதந்தி. கொரோனா நெகட்டிவ் சான்று தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.