ஹிந்தி தெரியாதா? அப்ப லோன் இல்லை எனக் கூறிய வங்கி மேலாளர் பணியிடமாற்றம்!

ஹிந்தி தெரியாதா? அப்ப லோன் இல்லை எனக் கூறிய வங்கி மேலாளர் பணியிடமாற்றம்!

அரியலூர் அருகே ‘ஹிந்தி தெரியாதா? அப்ப லோன் இல்லை’ என ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரை திருப்பி அனுப்பிய இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மேலாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன் அவருக்கு சொந்தமான இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு அதற்காக கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார். அந்த வங்கியில் மேலாளராக பணியாற்றிவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் என்பவர் பாலசுப்பிரமணியனுக்கு ஹிந்தி தெரியாததால் லோன் வழங்கவில்லை.

ஹிந்தி தெரியாதா? அப்ப லோன் இல்லை எனக் கூறிய வங்கி மேலாளர் பணியிடமாற்றம்!

இந்த குற்றச்சாட்டை அடுத்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் பட்டேலை பணியிட மாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்திரவு பிறப்பித்துள்ளார்.