சீனாவின் அராஜகங்களை வெளிச்சம் போட்டு காட்டிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு உலகின் உயரிய விருது!

 

சீனாவின் அராஜகங்களை வெளிச்சம் போட்டு காட்டிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு உலகின் உயரிய விருது!

சீனாவில் சிறுபான்மையினர்களான உய்குர் இஸ்லாமிய மக்களை அந்நாடு அரசு ஒடுக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் இஸ்லாமிய மக்களை முகாம்களில் அடைத்துவைத்து சீன அரசு கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்பட்டது. சீனா இதனை தொடர்ந்து மறுத்துவந்தாலும், பயங்கரவாதத்துக்கு எதிராக போராட பயிற்சியளிப்பதற்காக அம்மக்களை முகாம்களில் தங்க வைத்துள்ளதாக போலியான ஒரு காரணத்தை கூறியது.

சீனாவின் அராஜகங்களை வெளிச்சம் போட்டு காட்டிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு உலகின் உயரிய விருது!

உய்குர் இஸ்லாமியர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் விதமாக அவர்களுக்கு அடிப்படை உரிமையான பேச்சுரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது. சுதந்திரமாக மத வழிபாடுகள் செய்யவும் அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோல அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக, அம்மக்களை கட்டாய கருத்தடை, கருக்கலைப்பு, குடும்ப கட்டுப்பாடு செய்ய சீன அரசு வற்புறுத்துவதாகவும் தகவல் வெளியானது. சீனாவின் இந்த மனித உரிமை மீறலில் பல்வேறு நாடுகளும் அதிருப்தியில் இருக்கின்றன. ஐநாவிலும் சீனாவிற்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் அராஜகங்களை வெளிச்சம் போட்டு காட்டிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு உலகின் உயரிய விருது!

ஸ்டிங் ஆபரேஷன் செய்து சீனாவின் அராஜகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேகா ராஜகோபாலன். இவர் BuzzFeed என்ற பத்திரிகையில் ஊடகவியலாளராக (Journalist) பணியாற்றுகிறார். சீனாவின் முகாம்களை வெளியுலகிற்கு எடுத்துக் காட்டியதால் உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் ஜின்ஜியாங்கில் சீனா ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை முகாமில் அடைத்து வைக்க தொடங்கியது. இம்முகாம்களுக்கு வெளி ஆட்கள் வருவதற்கு சீனா தடை விதித்திருந்தது. அப்போதே மேகா ராஜகோபாலன் முதன்முதலில் ஒரு தடுப்பு முகாமுக்குச் சென்றார். இதுகுறித்து அவர் வெளியே சொல்லாமல் இருக்க அவரது விசாவை ரத்து செய்தது. நாட்டை விட்டு வெளியேற்றியது.