திடீரென குறைந்த கச்சா எண்ணெய் விலை…. ரூ.5,185 கோடி நஷ்டத்தை சந்தித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

திடீரென குறைந்த கச்சா எண்ணெய் விலை…. ரூ.5,185 கோடி நஷ்டத்தை சந்தித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

பொதுத்துறை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டின் நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ரூ.5,185.32 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2019 மார்ச் காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நிகர லாபமாக ரூ.6,099.27 கோடி ஈட்டியிருந்தது.

திடீரென குறைந்த கச்சா எண்ணெய் விலை…. ரூ.5,185 கோடி நஷ்டத்தை சந்தித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு குறைந்தது மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் கையிருப்பு நஷ்டம் அதிகரித்தது போன்ற காரணங்களால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கையிருப்பு இழப்பு அல்லது நஷ்டம் என்பது, நிறுவனம் மூலப்பொருளை (கச்சா எண்ணெய்) ஒரு குறிப்பிட்ட விலையில் வாங்கும் ஆனால் அதனை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி அதனை சுத்திகரிப்பு முடிந்த நேரத்தில் சர்வதேச சந்தையில் மூலப்பொருள் விலை குறைந்து விடும். ஆக வாங்கிய விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் சரக்கு இழப்பு ஏற்படுகிறது.

திடீரென குறைந்த கச்சா எண்ணெய் விலை…. ரூ.5,185 கோடி நஷ்டத்தை சந்தித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்

2020 மார்ச் காலாண்டில் மார்ச் காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ரூ.14,692 கோடி கையிருப்பு நஷ்டம் ஏற்பட்டது. 2019 மார்ச் காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு கையிருப்பு லாபமாக ரூ.1,787 கோடி கிடைத்தது. கடந்த மார்ச் காலாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து இருந்தாலும், சென்ற முழு நிதியாண்டில் (20119-20) ரூ.1,313 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.