விவசாயிகள், தொழிலாளர்கள் இந்திய குடியரசின் பலம்… விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு..

விவசாயிகள், தொழிலாளர்கள் இந்திய குடியரசின் பலம்… விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு..

விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள்தான் இந்திய குடியரசின் பலம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்தும் அவற்றை ரத்து செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு காங்கிரஸ் தனது ஆதரவை வழங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் இந்திய குடியரசின் உண்மையான பலம் என்று பதிவு செய்துள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்கள் இந்திய குடியரசின் பலம்… விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு..
காங்கிரஸ்

ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் டிவிட்டரில், பொது உணர்வை கருத்தில் கொண்டு முடிவுகளை மாற்றுவது அவமதிப்பு அல்ல. ஆனால் உன்னதமானது. ஒருமித்த கருத்தை உருவாக்கிய பின்னர் புதிய சட்டங்களை கொண்டு வருவது குறித்து அரசாங்கம் விவசாயிகளுடன் பேசலாம் என பதிவு செய்து இருந்தார்.

விவசாயிகள், தொழிலாளர்கள் இந்திய குடியரசின் பலம்… விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு..
முதல்வர் அசோக் கெலாட்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நேற்று தீவிரம் அடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் ஒரு குழுவினர் நேற்று பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுப்பட்டனர். மேலும் குடியரசு தின விழா பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு வீர்ர்கள் பதில் நடவடிக்கையில் இறங்கினர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.