எல்லையில் பதற்றமான சூழலில் சீன அமைச்சருடன் இந்திய அமைச்சர் சந்திப்பு

எல்லையில் பதற்றமான சூழலில் சீன அமைச்சருடன் இந்திய அமைச்சர் சந்திப்பு

சீனாவுடன் எல்லை பிரச்சினை இருக்கும் இந்த நேரத்தில் இரு நாடுகளின் அமைச்சர்கள் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான், சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் நமக்கும் இடையே எல்லை பிரச்சினைகள் அவ்வப்போது நடக்கும். பெரும்பாலும் பாகிஸ்தானோடுதான்.

ஜவகர்லால் நேரு இந்திய பிரதமராக இருந்த 1962-ம் ஆண்டில் சீனாவுடன் இந்தியாவுக்கு எல்லை பிரச்சினை தொடர்பாக சண்டை நடைபெற்றது. அது குறித்து இப்போதும் பல விவாதங்கள் நடைபெறுகின்றன.

எல்லையில் பதற்றமான சூழலில் சீன அமைச்சருடன் இந்திய அமைச்சர் சந்திப்பு

அதன்பின் பெரியளவில் சீனாவுடன் சிக்கல் ஏதுமில்லை. ஆனால், கடந்த சில மாதங்களாக சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் குறிப்பாக கிழக்கு லடாக் பகுதியில் அத்துமீறுவதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இரு நாடுகளின் கருத்து வேறுவேறாகவே இருக்கிறது. இந்தச் சிக்கலால், சீனாவில் டிக்டாக், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட செயலிகளை இந்தியா தடை செய்தது. சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தியா தம் முடிவில் பின்வாங்க வில்லை.

எல்லையில் பதற்றமான சூழலில் சீன அமைச்சருடன் இந்திய அமைச்சர் சந்திப்பு

தற்போது மாஸ்கோவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் சென்றிருக்கிறார்.

அங்கே சீனா, உஸ்பெஸ்கிதான் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்து பேசினர். அப்போது சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங்க் யீயைச் சந்தித்துப் பேசினார் ஜெயசங்கர்.

எல்லையில் பதற்றமான சூழலில் சீன அமைச்சருடன் இந்திய அமைச்சர் சந்திப்பு

சுமார் 2 மணி நேரம் நீட்டித்த இந்தப் பேச்சில், லடாக் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என சீனா வெளியுறவு துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.