மூன்று அமெரிக்க குழந்தைகளை காப்பாற்றப்போய் தன்னுயிரை இழந்த இந்தியர் -அமெரிக்காவில் சீக்கியரின் சாகசம்

 

மூன்று அமெரிக்க குழந்தைகளை காப்பாற்றப்போய் தன்னுயிரை இழந்த இந்தியர் -அமெரிக்காவில் சீக்கியரின் சாகசம்

 

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் மன்ஜீத் சிங் என்ற 29 வயதான இந்தியர் கடந்த புதன்கிழமை மாலை ,ஃப்ரெஸ்னோ கவுண்டியில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள ரீட்லி கடற்கரையின் அருகில் உள்ள கிங்ஸ் ஆற்றில் தன்னுடைய மைத்துனர் மற்றும் சில நண்பர்களோடு சென்று கொண்டிருந்தார்
அப்போது அந்த கடற்கரை அருகிலுள்ள கிங்ஸ் ஆற்றில் 10 வயதுள்ள ஒரு சிறுவனும் ,எட்டு வயதுள்ள இரண்டு சிறுமிகளும் மொத்தம் மூன்று குழந்தைகள் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடுவதைக் கண்டார் .
உடனே அவர் அந்த ஆற்றில் குதித்து அந்த சிறுவர்களை தன்னுடைய தலைப்பாகையை கயிறாக மாற்றி காப்பாற்ற முயன்றார் .அந்த நேரத்தில் ஆற்றுக்குள் அவர் விழுந்தார் .அவர்களை காப்பாற்றிய சிறிது நேரத்தில் அங்குள்ள ஒரு சுழலில் அவர் சிக்கினார் ,பிறகு தண்ணீரின் ஆழத்தில் அவரை அந்த சுழல் கொண்டு போய் சொருகியுள்ளது .

மூன்று அமெரிக்க குழந்தைகளை காப்பாற்றப்போய் தன்னுயிரை இழந்த இந்தியர் -அமெரிக்காவில் சீக்கியரின் சாகசம்
இதனால் அதிலிருந்து மீள முடியாமல் அவர் சிக்கி கொண்டார் .ஆனால் சிறுவர்களை காப்பாற்றிய அவரால் தன்னை காப்பற்றிக்கொள்ள முடியவில்லை .தண்ணீரில் மூழ்கிய அவர் 40 அடிக்கும் கீழே சென்றதால் அவர் உயிர் பிழைக்க முடியாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார் .சிறுவர்களை காப்பாற்றப்போய் தன்னுடைய உயிரை இழந்த இந்தியரின் சேவையை அங்குள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் பத்திரிகைகள் பாராட்டியுள்ளன .