’30 ஆண்டுகால உறவில் பாதிப்பு’ சீனா பற்றி இந்திய வெளியுறவு துறை அமைச்சர்

’30 ஆண்டுகால உறவில் பாதிப்பு’ சீனா பற்றி இந்திய வெளியுறவு துறை அமைச்சர்

நம் அண்டைநாடுகளில் அதிக சச்சரவு கொண்டது பாகிஸ்தானே. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அடிக்கடி உரசல் ஏற்படும். ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் ஏற்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தானே காரணம் என்று இந்தியா தொடர்ந்து கூறிவரும். அதை பாகிஸ்தான் மறுப்பதும் நடப்பதுதான். ஆனால், சீனாவுடன் அப்படியான நிலை இருந்தது இல்லை.

’30 ஆண்டுகால உறவில் பாதிப்பு’ சீனா பற்றி இந்திய வெளியுறவு துறை அமைச்சர்

ஆனால், கடந்த ஆறுமாதங்களாக சீன நாட்டின் எல்லைப் பகுதியில் சீன அரசு ராணுவத்தினர் குவித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின. எல்லைப் பகுதியில் சிறுசிறு தாக்குதல் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. சீனா நாட்டின் இணைய செயலிகளை இந்திய அரசு முடக்கியிருப்பதும் நாம் அறிந்ததே.

’30 ஆண்டுகால உறவில் பாதிப்பு’ சீனா பற்றி இந்திய வெளியுறவு துறை அமைச்சர்

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘சீனாவுடன் இந்தியாவின் உறவு 30 ஆண்டுகளாக உறவு நல்லவிதமாக, ஆரோக்கியமானதாக இருந்து வருகிறது. அதனை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளின் தரப்புகளிலும் பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்நிலையில் பிரச்னைக்கு உரிய எல்லைப் பகுதியில் சீனா படைகளைக் குவித்து வருவதால் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் போன்றவையே நடக்க வாய்ப்பிருக்கிறது. இது நீண்ட கால உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கூறியிருக்கிறார்.