• November
    17
    Sunday

Main Area

Main



திரையுலகில் கால் பதித்த 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பவுலர் இர்பான் பதான்! 

Irfan Pathan
Irfan Pathan

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Irfan Pathan

சியான் விக்ரம் நடிக்கும் 58 ஆவது திரைப்படத்தில் இர்பான் பதானும் இணைந்துள்ளார். இந்த படத்தை டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், விக்ரமுடன் இர்பான் பதான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்த படத்தில் விக்ரமுக்கு வில்லனாக களமிறங்குவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.  படத்தில் இர்பான் பதானுக்கு காவலர் வேடம் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரின் அதிரடி சண்டை காட்சிகள் இடம்பெறும் என்றும், வெயிட்டான ரோலிலே அவர் களமிறங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.   
 

2018 TopTamilNews. All rights reserved.