வெற்றியை நோக்கி இந்திய கிரிக்கெட் அணி! #IndVsAus

 

வெற்றியை நோக்கி இந்திய கிரிக்கெட் அணி! #IndVsAus

ஒருநாள் போட்டியின் பரபரப்பைப் போல விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காம் டெஸ்ட் போட்டி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லபுஷேன்108 ரன்கள் அடித்தார்.

இந்திய பவுலர்களில் தமிழகத்தில் நடராஜன் 3 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வெற்றியை நோக்கி இந்திய கிரிக்கெட் அணி! #IndVsAus

இந்திய அணியின் முதல் இன்னிங்கிச் பேட்டிங்கில் ரோஹித் சர்மா மற்றும் சுப்னம் கில் இருவரும் ஓப்பனிங் இறங்கினார்கள். ரோஹித் சர்மா 44, கில் 7 ரன்கள், புஜாரா, 25 ரகானே 37, மயங்க் அகர்வால் 38, ரிஷப் பண்ட் 23 என்கின்ற வரிசையில் ஆட்டமிழந்தனர். ஆனால் வாஷிங்டன் சுந்தர் – ஷர்துல் தாகூர் இருவரும் சேர்ந்து அதிரடியான பார்ட்னர்ஷிப் போட்டனர். வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களையும் தாக்கூர் 67 ரன்களையும் விளாசினர். இறுதியாக இந்திய அணி 10 விக்கெட் விக்கெட்டுகளையும் இழந்து 336 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இன்னிங்க்ஸில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

வெற்றியை நோக்கி இந்திய கிரிக்கெட் அணி! #IndVsAus

ஹாரிஸ் 38, டேவிட் வார்னர் 48, லபுஷேன் 25, ஸ்மித் 55, என ஓரளவு நன்றாகவே விளையாடினார்கள். அடித்து ஆட வேண்டும் என்று நினைத்ததால் விரைவாக விக்கெட் விழுந்தன. குறிப்பாக லபுஷேன், வேட், டிம் விக்கெட்டுகள் விரைவில் விழுந்தது இந்திய அணிக்கு சாதகமே.

இந்திய பவுலிங்கில் முகம்மது சிராஜ் அற்புதமாக வீசி 5 விக்கெட்டுகளைப் பறித்தார். அதேபோல ஷ்ர்துல் தாகூட் 4 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

வெற்றியை நோக்கி இந்திய கிரிக்கெட் அணி! #IndVsAus

328 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு இந்திய அணி ஆடி வருகிறது. இதுவரை 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 218 ரன்களை குவித்துள்ளது. ரோஹித் ஷர்மா 7 ரன்களோடு அவுட்டாகி இம்முறை ஏமாற்றினார். கில் அற்புதமாக ஆடி 91 ரன்கள் அடித்தார். ராஹானே 24 ரன்களோடு அவுட்டானார். புஜாரா 52 ரன்களோடும், விக்கெட் கீப்பர் 32 ரன்களோடு ஆடி வருகின்றனர்.

24.5 ஓவர்களில் 110 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கில் இந்திய வீரர்கள் ஆடி வருகிறார்கள். கொஞ்சம் விரைந்து ரன்கள் எடுத்தால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம். அதற்கேற்றார் போலத்தான் இருவரும் ஆடி வருகின்றனர். வெற்றியை நோக்கிச் செல்கிறது இந்திய அணி.