இளம் வீரர்கள் அசத்தும் புதிய அணி… இலங்கைக்கு எதிரான தொடரின் இந்திய அணி அறிவிப்பு!

 

இளம் வீரர்கள் அசத்தும் புதிய அணி… இலங்கைக்கு எதிரான தொடரின் இந்திய அணி அறிவிப்பு!

இலங்கைக்கு எதிரான தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக வலிமையான ஒரு அணியை ஒன்றிணைக்கும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபடியாக இலங்கை சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய இந்திய அணி ஒன்று உருவாக்கப்பட்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் அனுப்பப்படவுள்ளது. இந்திய அணி இலங்கைக்கு எதிராக ஆடவிருக்கும் போட்டியில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் இடம் பெற உள்ளது.

இளம் வீரர்கள் அசத்தும் புதிய அணி… இலங்கைக்கு எதிரான தொடரின் இந்திய அணி அறிவிப்பு!

ஜூலை 13ம், 16 மற்றும் 18-ம் தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. அதையடுத்து ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் இந்தத் தொடர் போட்டிகள் நடைபெறவுள்ளது

தற்போது இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரில் பங்கு பெற இருக்கும் இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஷிகர் தவான் இந்த அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளம் வீரர்கள் அசத்தும் புதிய அணி… இலங்கைக்கு எதிரான தொடரின் இந்திய அணி அறிவிப்பு!

இந்திய அணி விவரம்:

ஷிகர் தவான் (கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), யுவேந்திர சஹால், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா.

இளம் வீரர்கள் இந்த அணியில் இடம் பெற்றிருப்பதால் அணியின் மீது அதீத நம்பிக்கை உருவாகியுள்ளது. இந்தத் தேர்வுக்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.