முதலீடுகளை வெளிநாட்டுக்குச் கொண்டு சென்ற இந்திய நிறுவனங்கள் – எவ்வளவு தெரியுமா?

முதலீடுகளை வெளிநாட்டுக்குச் கொண்டு சென்ற இந்திய நிறுவனங்கள் – எவ்வளவு தெரியுமா?

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளைச் செய்வதுபோல, இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்களும் வெளிநாடுகளில் முதலீடுகளைச் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்திய நிறுவனங்கள் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டினை வெளிநாடுகளில் மேற்கொண்டுள்ளன.

நடப்பு நிதியாண்டில் , ஊரடங்கு காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வந்தது. இந்த நிலையில், இந்திய நிறுவனங்கள் முதல் 8 மாதங்களில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலீடுகளை வெளிநாட்டுக்குச் கொண்டு சென்ற இந்திய நிறுவனங்கள் – எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக, இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் அமைத்துள்ள தங்களது துணை நிறுவனங்களில் இந்த முதலீட்டினை மேற்கொண்டுள்ளன. அமெரிக்கா, சிங்கப்பூர், நெதர்லாந்து நாடுகளில் முதலீட்டினை செய்துள்ளதாக கேர் தரச்சான்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு ரூ. 5 லட்சத்து 60 கோடி முதலீடு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீடுகளை வெளிநாட்டுக்குச் கொண்டு சென்ற இந்திய நிறுவனங்கள் – எவ்வளவு தெரியுமா?

வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்துள்ளதன் மூலம், அங்கு விரிவாக்க வேலைகளை இந்திய நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷாலினி