’சீனாவுடன் உரசலில் பாகிஸ்தான் குளிர்காய நினைத்தால்…’ முப்படை தளபதி எச்சரிக்கை

’சீனாவுடன் உரசலில் பாகிஸ்தான் குளிர்காய நினைத்தால்…’ முப்படை தளபதி எச்சரிக்கை

இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே பாகிஸ்தான் பிரிவின, எல்லை பிரிப்பு என பிரச்சனைகள் இருந்த வண்ணமே உள்ளன. அதிலும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியால் இன்னும் சிக்கல்தான்.

காஷ்மீரில் இன்றுவரை பதற்றம் நிலவ ஏதேனும் ஒருவகையில் பாகிஸ்தான் காரணமாக இருக்கிறது என்பது இந்தியத் தரப்பில் சொல்லப்படும் குற்றச்சாட்டு.

’சீனாவுடன் உரசலில் பாகிஸ்தான் குளிர்காய நினைத்தால்…’ முப்படை தளபதி எச்சரிக்கை

சீனாவுடனும் இந்தியாவுக்கு எல்லை பிரச்னைகள் இருக்கிறது என்றாலும் கடந்த இருபது ஆண்டுகளாக பெரிய அளவில் உரசல்கள் இல்லை. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறுவதாகப் புகார்கள் சொல்லப்படுகின்றன.

இதனால் சீனா நாட்டின் டிக்டாக், கேம்ஸ்கேனர் உள்ளிட்ட செயலிகளை நீக்கும் நடவடிக்கையை இந்திய அரசு எடுத்தது. தற்போது பல நாடுகளில் டிக்டாக் தடை விதிக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. சமீபத்தில்கூட நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

’சீனாவுடன் உரசலில் பாகிஸ்தான் குளிர்காய நினைத்தால்…’ முப்படை தளபதி எச்சரிக்கை

president and bipin rawat

இந்நிலையில், இந்திய கூட்டமைப்பு தொடர்பாக அமெரிக்காவில் நடைபெறும் மாநாட்டில் இந்தியாவின் முப்படை தளபதி பிபன் ராவத் கலந்துகொண்டிருக்கிறார்.

அம்மாநாட்டில் பிபன் ராவத் பேச்சில் அனல் வெளிப்பட்டது, ‘லடாக் பகுதியில் சீனாவுடன் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் உரசலைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ஏதேனும் விபரீத முயற்சியில் ஈடுபட்டால், அதற்கான எதிர்வினைகள் மிகக் கடுமையாக இருக்கும்’ என்பதாக எச்சரித்திருக்கிறார்.