இந்தியாவின் பதக்க கனவு கலைந்தது… வெளியேறினார் மேரி கோம் – பழி தீர்த்தார் கொலம்பியா வீராங்கனை!

இந்தியாவின் பதக்க கனவு கலைந்தது… வெளியேறினார் மேரி கோம் – பழி தீர்த்தார் கொலம்பியா வீராங்கனை!

ஒலிம்பிக்ஸ் 2020 தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவிற்காக இவர்கள் நிச்சயம் பதக்கம் வென்று தருவார்கள் என்று ஒரு பட்டியலை ரெடி செய்தால் அதில் மேரி கோமின் பெயர் இடம்பெற்றிருக்கும். நான்கு குழந்தைகளுக்கு தாயான மேரி கோம் 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலம் வென்றார். இதிலிருந்தே இவர் வெளிச்சம் பெற்றார். இதுமட்டுமல்லாமல் ஆறு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.

இந்தியாவின் பதக்க கனவு கலைந்தது… வெளியேறினார் மேரி கோம் – பழி தீர்த்தார் கொலம்பியா வீராங்கனை!

அவரின் புள்ளிவிவரங்கள் தான் ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கையை விதைத்திருந்தன. கடந்த 25ஆம் தேதி தன்னை விட 12 வயது இளையவரான டொமினிகாவின் மிக்லினா கார்ஸியாவுடன் மோதினார். அனுபவசாலி மேரி கோம் vs இளரத்தம் மிக்லினா என்பதால் பரபரப்பாக சென்றது. களத்தில் தனது அனுபவத்தைக் காட்டிய மேரி கோம் பல தரமான பஞ்ச்களை போட்டுத் தாக்கினார். இதனால் மிக்லினா நிலைகுலைந்து போனார். இறுதியில் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் மேரி கோம் வெற்றியைப் பறித்தார்.

இந்தியாவின் பதக்க கனவு கலைந்தது… வெளியேறினார் மேரி கோம் – பழி தீர்த்தார் கொலம்பியா வீராங்கனை!

இதையடுத்து இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பலம்வாய்ந்த கொலம்பியா வீராங்கனை இன்கிரிட் வெலன்சியாவுடன் மோதினார். 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றவர் என்பது கவனித்தக்கது. இவரும் மேரி கோமுக்கு சற்றும் சளைத்தவர் அல்ல. கொலம்பியா நாட்டிலிருந்து ஒலிம்பிக் வந்த முதல் குத்துச்சண்டை வீராங்கனை இவர். அவ்வாறு வந்து பதக்கம் வென்றவரும் இவர் தான். இருப்பினும் மேரி கோமுடன் 2019 உலக சாம்பியன்ஷிப் காலிறுதியில் மோதி 5-0 என்ற கணக்கில் பரிதாபமாக தோற்றுப் போனார். அந்த அனுபவம் மேரி கோமுக்கு கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தியாவின் பதக்க கனவு கலைந்தது… வெளியேறினார் மேரி கோம் – பழி தீர்த்தார் கொலம்பியா வீராங்கனை!

வயது வேறு 38 ஆவதால் இதுதான் அவரின் கடைசி ஒலிம்பிக்காக இருக்கலாம் என்பதால் மிக முக்கியமான போட்டியாகப் பார்க்கப்பட்டது. எது எப்படியாகினும் இரு பலம் வாய்ந்த வீராங்கனைகள் மோதுவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதைப் போலவே இருவரின் ஆட்டமும் இருந்தது. தொடக்க சுற்றில் வெலன்சியா ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் மேரி கோமால் கடுமையாகப் போராடியும் வெலன்சியாவை வீழ்த்த முடியவில்லை. இறுதியில் 2-3 என்ற கணக்கில் தோற்று ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார் மேரி கோம். தோற்றாலும் வென்றாலும் அவர் தங்கம் தான் என இந்தியர்கள் சோசியல் மீடியாக்களில் பாராட்டி வருகின்றனர்.