‘அத்துமீறிய சீன ராணுவம்’ : சிக்கிம் எல்லையில் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்!

 

‘அத்துமீறிய சீன ராணுவம்’ : சிக்கிம் எல்லையில் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்!

சிக்கிம் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சீன – இந்திய எல்லையில் நடக்கும் பிரச்னை ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீறுபூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது எல்லையில் ஊடுருவ முயலும் சீனாவின் அத்துமீறலை சமாளிக்க 50 முக்கிய இடங்களில் வீரர்களை குவித்து தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்கிறது இந்தியா. அதே போல சீனாவும், தனது பங்கிற்கு வீரர்களை குவித்திருக்கிறது.

‘அத்துமீறிய சீன ராணுவம்’ : சிக்கிம் எல்லையில் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்!

இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையை தணிக்க விரும்பும் இந்தியா, சீன ராணுவத்துடன் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த நவம்பர் 6 ஆம் தேதி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பினரும் தங்களது படைகளை வாபஸ் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ராணுவ ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் பேச்சுவார்த்தைகள் தொடருகிறது. நேற்று 9ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது.

‘அத்துமீறிய சீன ராணுவம்’ : சிக்கிம் எல்லையில் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்!

இந்த நிலையில், சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுரு முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. ரோந்து பணியின் போது எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றதை கண்டுபிடித்த வீரர்கள், ஊடுருவல் முயற்சியை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளனர். இதற்கு சீன ராணுவத்தினர் ஒப்புக் கொள்ளாததால், ஒரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், 20 சீன வீரர்களும் 4 இந்திய வீரர்களும் காயமடைந்திருப்பதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.