எல்லையில் பறக்கும் சீன ராணுவ விமானங்கள்.. லடாக்கில் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை குவித்த ராணுவம்…

எல்லையில் பறக்கும் சீன ராணுவ விமானங்கள்.. லடாக்கில் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை குவித்த ராணுவம்…

கடந்த சில மாதங்களாக சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்து வருகிறது. இதன் உச்ச கட்டமாக கடந்த 15ம் தேதியன்று கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து அவர்களை விரட்டினர் அப்போது ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்தது.

எல்லையில் பறக்கும் சீன ராணுவ விமானங்கள்.. லடாக்கில் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை குவித்த ராணுவம்…

மேலும் எல்லை கட்டுபாட்டு பகுதியில் சீனா ராணுவ துருப்புகளை குவித்தது. இதனையடுத்து பதிலுக்கு இந்திய ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தது. இதனையடுத்து எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றத்தை தணிக்க இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. அந்த பேச்சுவார்த்தையில் ராணுவத்தை பின்வாங்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. ஆனால் பேச்சுவார்த்தைக்கு முரண்பாடாக சீனா எல்லையில் படை பலத்தை குவித்தது. போர் விமானங்களை அதிகளவில் அந்த பகுதியில் நிறுத்தியது மற்றும் ஹெலிபேடும் அமைத்தது.

எல்லையில் பறக்கும் சீன ராணுவ விமானங்கள்.. லடாக்கில் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை குவித்த ராணுவம்…

எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சீன விமான படையின் போர் விமானங்கள் அதிகளவில் பறக்கின்றன. இந்த நிலையில் கிழக்கு லடாக் செக்டாரில், நிலத்திலிருந்து விண்ணில் தாக்கும் அதிநவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறுகையில், கிழக்கு லடாக் செக்டாரில் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், சீன விமான படையின் விமானங்கள் அல்லது சீன மக்கள் ராணுவத்தின் ஹெலிகாப்படர்களின் எந்தவொரு தவறான நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில், இந்திய ராணுவமும், இந்திய விமான படையும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை அந்த செக்டாரில் நிறுத்தியுத்துள்ளது என தெரிவித்தன.