லடாக்கில் இந்திய-சீன துருப்புகள் பரஸ்பரம் பின்வாங்கின…. இன்று அடுத்த கட்ட ராணுவ பேச்சுவார்த்தை…

 

லடாக்கில் இந்திய-சீன துருப்புகள் பரஸ்பரம் பின்வாங்கின….  இன்று அடுத்த கட்ட ராணுவ பேச்சுவார்த்தை…

இந்திய-சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இரு நாடுகளும் ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை முடிவு செய்தன. இதனையடுத்து சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மோல்டாவில் 6ம் தேதியன்று 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையில் இந்திய தூதுக்குழு, சீன தரப்பு ராணுவ குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், இந்த வாரம் ஹாட் ஸ்பிரிங் பகுதி, பட்ரோலிங் பாயிண்ட் 14 மற்றும் பட்ரோலிங் பாயிண்ட் 15 பகுதிகளில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்த முடிவு இரு தரப்பு அதிகாரிகளும் முடிவு செய்தனர்.

லடாக்கில் இந்திய-சீன துருப்புகள் பரஸ்பரம் பின்வாங்கின….  இன்று அடுத்த கட்ட ராணுவ பேச்சுவார்த்தை…

அதன்படி, இன்று கிழக்கு லடாக்கில் ஹாட் ஸ்பிரிங் பகுதியில், எல்லை பிரச்சினை தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த பேச்சு வார்த்தைக்கு முன்னதாக நேற்று கிழக்கு லடாக்கின் பெரும்பாலான பகுதிகளில் இந்திய மற்றும் சீன படைகள் பரஸ்பர பின்வாங்க தொடங்கி விட்டன. பாங்கோங் டிசோவில் பிங்கர் பகுதி தவிர மற்ற பகுதியில் சீன படைகள் 2 முதல் 3 கி.மீட்டர் தொலைவுக்கு பின்வாங்கின. அதேபோல் இந்தியாவும் அந்த பகுதிகளில் தனது படைகள் மற்றும் வாகனங்களை அந்த பகுதியிலிருந்து திரும்ப அழைத்து கொண்டது.

லடாக்கில் இந்திய-சீன துருப்புகள் பரஸ்பரம் பின்வாங்கின….  இன்று அடுத்த கட்ட ராணுவ பேச்சுவார்த்தை…

சீன ராணுவத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய ராணுவ குழுவினா் நேற்று சுசுலில் தங்கியிருந்தனர். இன்று ஹாட் ஸ்பிரிங் பகுதியில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் பேச்சவார்த்தை நடத்த உள்ளனர். இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேட்டி ஒன்றில், சீனாவுடான பல தசாப்த கால எல்லை பிரச்சினையை சீக்கிரம் தீர்க்க இந்தியா விரும்புகிறது. கிழக்கு லடாக் மோதல் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற உயர் மட்ட ராணுவ பேச்சுவார்த்தை பாசிட்வாக இருந்தது என குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது.