ரூ.273 கோடி லாபம் பார்த்த இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம்….

ரூ.273 கோடி லாபம் பார்த்த இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம்….

வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.273 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அந்நிறுவனம் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.802 கோடி ஈட்டியிருந்ததது.

ரூ.273 கோடி லாபம் பார்த்த இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம்….
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ்

ஆக, கடந்த ஜூன் காலாண்டில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம் 66 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் 33.7 சதவீதம் சரிந்து ரூ.2,578 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த வருவாயாக ரூ.3,386 கோடி ஈட்டியிருந்தது.

ரூ.273 கோடி லாபம் பார்த்த இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம்….
எஸ்.எஸ். முந்த்ரா

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை கவர்னர் எஸ்.எஸ். முந்த்ரா நிறுவனத்தின் நிர்வாகமற்ற தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 12ம் தேதி முதல் அது அமலுக்கு வந்துள்ளதாகவும் இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.