திருமணம் ஆகாத விரக்தி ; உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!

 

திருமணம் ஆகாத விரக்தி ; உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!

ஹைதராபாத்தில் திருமணமாகாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் சாரி என்பவர் பொற்கொல்லராக வேலைப்பார்த்து வந்துள்ளார். அவர் தான் வேலை பார்க்கும் இடத்தின் அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு மது அருந்தி விட்டு சென்றதாக தெரிகிறது. ஸ்ரீகாந்த்தை வீட்டின் உரிமையாளர் அவரது அறைக்கு அழைத்துச் சென்று உதவியுள்ளார்.

திருமணம் ஆகாத விரக்தி ; உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!

பின்னர் தனது சகோதரிக்கு அழைப்பு விடுத்த ஸ்ரீகாந்த், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக விரக்தியுடன் பேசியுள்ளார். பதற்றமடைந்த அவரது சகோதரி உடனே ஸ்ரீகாந்த் வீட்டிற்கு கிளம்பி சென்ற நிலையில், தூக்கில் தொங்கிய படி அவர் ஸ்ரீகாந்த் சடலமாக கிடந்துள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். ஸ்ரீகாந்த் தற்கொலை குறித்து அவரது சகோதரியிடம் போலீசார் விசாரித்த போது, தனக்கு 39 வயது ஆகியும் திருமணம் ஆகாததால் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக செல்போனில் ஸ்ரீகாந்த் கூறியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.