ரவுடிகளால் கொல்லப்பட்ட 8 போலீசாரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி!

 

ரவுடிகளால் கொல்லப்பட்ட 8 போலீசாரின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதி!

உத்தர பிரதேசத்தில் ரவுடிகளை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் எட்டு காவல்துறையினர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

கான்பூரில், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் விகாஸ் துபே என்ற ரவுடியைத் தேடி காவல்துறையினர் சென்றபோது அவர்களை நோக்கி ரவுடிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர் இதில், துணை காவல் கண்காணிப்பாளர் தேவேந்திரா மிஸ்ரா உள்ளிட்ட எட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சண்டையில் மேலும் சில காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். காவல்துறையினரை கொன்ற இந்த சம்பவம் அங்கு சட்டம் ஓழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், துப்பாக்கியால் சுட்டவர்கள் மீது கடும் நடவடிக்க எடுக்க உததரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

இதுகுறித்து மாநில டிஐஜி அவஸ்தி அறிக்கை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார் ‘இறந்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கு யோகி ஆதித்யநாத், இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.