தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி!! வீடியோ எடுத்து மகிழ்ந்த கணவர்

 

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி!! வீடியோ எடுத்து மகிழ்ந்த கணவர்

ஆந்திராவில் சந்தேகத்தால் அடிக்கடி சண்டை போட்டு வந்த கணவர் கண் முன்னே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி!! வீடியோ எடுத்து மகிழ்ந்த கணவர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்மகுறு நகரைச் சேர்ந்த பெஞ்சலையாவுக்கும் அனந்தசாகரம் மண்டலம் கோட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கொண்டம்மாவுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெஞ்சலைய்யா ஹெச்.டி.எஃப்.சி ஏடிஎம் மையத்தில் பாதுகாவலராக பணிபுரிகிறார். திருமணத்திற்கு பிறகு அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் மனைவி கொண்டம்மா மீது சந்தேகப்பட்டு அவ்வப்போது பெஞ்சலைய்யா சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று தம்பதியிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கொண்டம்மா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை தடுக்க வேண்டிய பெஞ்சலைய்யா அதனை வேடிக்கை பார்த்து கொண்டு, தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து மகிழ்ச்சியடைந்தான். கணவன் கண் எதிரிலேயே கொண்டம்மா தூக்கில் தொங்கியபடி துடி துடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேரமாகியும் கணவன், மனைவி இருவரும் வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்தபோது கணவன் கண் எதிரிலேயே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அத்மக்கூறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.