வாடிக்கையாளர்களை இழக்கும் வோடோபோன் ஐடியா.. ஜியோவை ஓவர்டேக் செய்த ஏர்டெல்

 

வாடிக்கையாளர்களை இழக்கும் வோடோபோன் ஐடியா.. ஜியோவை ஓவர்டேக் செய்த ஏர்டெல்

2021 ஜனவரி மாதத்தில் வோடோபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் 23 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக டிராய் சரிசெய்யப்பட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் வோடோபோன் ஐடியா, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வருகின்றன. வோடோபோன் ஐடியா, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய தனியார் நிறுவனங்கள்தான் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் 3ஜி நெட்வொர்க்கை வைத்து ஏதோ காலத்தை தள்ளி வருகிறது.

வாடிக்கையாளர்களை இழக்கும் வோடோபோன் ஐடியா.. ஜியோவை ஓவர்டேக் செய்த ஏர்டெல்
பார்தி ஏர்டெல்

தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் கடந்த ஜனவரி மாத தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை வெளியிட்டது. அதில் வோடாபோன் ஐடியா நிறுவனம் கடந்த ஜனவரில் புதிதாக 17 லட்சம் இணைப்புகளை வழங்கி இருப்பதாக வெளியிட்டு இருந்தது. ஆனால் உண்மையில் அந்நிறுவனம் 23 லட்சம் இணைப்புகளை இழந்து இருந்தது.

வாடிக்கையாளர்களை இழக்கும் வோடோபோன் ஐடியா.. ஜியோவை ஓவர்டேக் செய்த ஏர்டெல்
ஜியோ

இதனையடுத்து டிராய் தற்போது திருத்தப்பட்ட புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் கவனகுறைவு பிழை காரணமாக தவறு நேர்ந்ததாக தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் 23 லட்சம் வாடிக்கையாளர்களை வோடோபோன் ஐடியா இழந்துள்ளது. அதேசமயம் பார்தி ஏர்டெல் நிறுவனம் புதிதாக 59 லட்சம் இணைப்புகளை வழங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக 20 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. 2021 ஜனவரி 21ம் தேதி நிலவரப்டி, 41.07 கோடி மொபைல் சந்தாதாரர்களுடன் ஜியோ முதலிடத்தில் உள்ளது. 34.46 கோடி வாடிக்கையாளர்களுடன் பார்தி ஏர்டெல் 2வது இடத்திலும், வோடாபோன் ஐடியா 28.19 கோடி மொபைல் சந்தாதாரர்களுடன் 3வது இடத்திலும் உள்ளன.