அடுத்த சர்ச்சை! அசைவ உணவு கொண்டுவந்ததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட மாணவன்

 
zcv

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள தனியார் பள்ளியில், அசைவ உணவு கொண்டு வந்ததாகக்கூறி, 7 வயது மாணவனை, பள்ளியைவிட்டு நீக்கிய சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Wants to convert...': Principal expels 5-year-old for bringing non-veg food


உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ள தனியார் பள்ளியில், அசைவ உணவு கொண்டு வந்ததாகக்கூறி, 7 வயது மாணவனை, பள்ளியைவிட்டு நீக்கிய சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்துடன் மாணவனின் தாயார் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.  இதையடுத்து, சம்பவம் குறித்து மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் உத்தரவின்பேரில், 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சமீபத்தில் வெளியான அந்த வீடியோவில், அந்த இளம் மாணவர், அசைவ உணவான பிரியாணியை பள்ளிக்கு கொண்டு வந்தபோது, ​​பள்ளி முதல்வர் கடுமையாக திட்டுவதை காட்டுகிறது. குழந்தையின் மதப் பின்னணி குறித்தும் முதல்வர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாகவும், அசைவ உணவு உட்கொள்ளும் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.