மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று உறுதி!!

 
nitin

நாட்டில் கொரோனா  பரவல் வேகமாக பரவிவருகிறது. தொற்று பாதிப்பு என்பது திட்டம் ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே இருக்கிறது.  இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு  போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கொரோனா தொற்றால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

nitin

அந்த வகையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு  உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  லேசான அறிகுறிகளுடன் நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தேவையான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி,  தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும்  பரிசோதனையைச் செய்து, தனிமைப்படுத்தல் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

corona virus

முன்னதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் அஜய் பட், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முதலமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பசவராஜ் பொம்மை, நிதிஷ்குமார் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.