பதவியேற்ற கையோடு ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்த புதிய ஐடி அமைச்சர்!

 

பதவியேற்ற கையோடு ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்த புதிய ஐடி அமைச்சர்!

இரு நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத் பதவி விலகினார். அவருக்குப் பதிலாக அஸ்வினி வைஷ்ணவ் புதிய அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். இவர் நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். நேற்று முறைப்படி அமைச்சர் பொறுப்பை ஏற்று பணிகளை ஆரம்பித்தார். இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பியாவார். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர்.

பதவியேற்ற கையோடு ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்த புதிய ஐடி அமைச்சர்!

அமைச்சரான பிறகு பேட்டியளித்த அவர், “தேசத்திற்கு சேவை செய்ய பிரதமர் எனக்கு வழங்கிய சிறந்த வாய்ப்பிற்காக நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே என எனக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று துறைகளிலும் என்னுடைய பணிகள் சிறப்பாக இருக்கும். பிரதமருடைய தொலைநோக்கு பார்வையை செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய நான் கடுமையாக உழைப்பேன். இந்திய மண்ணின் உயரிய தன்மை அரசியலமைப்பு சட்டத்துக்குத்தான் இருக்கிறது. ஆகவே எங்களுடைய சட்டங்களுக்கு ட்விட்டர் போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும்” என்றார்.

பதவியேற்ற கையோடு ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்த புதிய ஐடி அமைச்சர்!

ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் ஏற்கெனவே கடும் மோதல் வெடித்துள்ள நிலையில், புதிய அமைச்சரின் முதல் பேட்டியே இவ்வாறு அமைந்திருப்பது ட்விட்டருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டியுள்ளது. இன்னமும் முடிவடையாத இப்பிரச்சினையை அஸ்வினி முடிவுக்கு கொண்டுவருவரா, ரவிசங்கர் பிரசாத்தால் ஆகாத காரியத்தை இவர் முடிப்பாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசின் புதிய ஐடி விதிகளைச் செயல்படுத்த எட்டு வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.