"இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள்"- திருப்பதி தேவஸ்தானம்

 
திருப்பதி

இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் மனம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று காலை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு நெய் கலப்படம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஏழுமலையான் கோயிலில் சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

இந்நிலையில் லட்டுவில் மாட்டுக்கொழுப்பு நெய் கலந்ததற்கு தோஷம் நீக்குவதற்காக, பக்தர்கள் தங்கள் வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்ற வேண்டுமென திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது. வீடுகளில் விளக்கேற்றி “ஓம் நமோ நாராயணாய” என்று மந்திரம் உச்சரிக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.