லட்டு சர்ச்சை- சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம் அமைக்கும் நேரம் வந்துவிட்டது: பவன் கல்யாண்

 
பவன் கல்யாணுக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

Image

திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், “திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு (மீன் எண்ணெய், பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு) கலந்திருப்பதைக் கண்டு நாம் அனைவரும் ஆழ்ந்த கலக்கமடைந்துள்ளோம். கடந்த  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்ட திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு  பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.  சாத்தியமான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க எங்கள் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. ஆனால், இது கோவில்களை இழிவுபடுத்துதல், அதன் நிலப் பிரச்சினைகள் மற்றும் பிற இந்து தர்ம நடைமுறைகளைச் சுற்றியுள்ள பல சிக்கல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நாடு முழுவதும்  உள்ள கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் 'சனாதன தர்ம பாதுகாப்பிற்கு நல வாரியம்' அமைக்கும் நேரம் வந்துவிட்டது.

கொள்கை வகுப்பாளர்கள், மதத் தலைவர்கள், நீதித்துறை, குடிமக்கள், ஊடகங்கள் மற்றும் அந்தந்தக் களங்களில் உள்ள அனைவராலும் தேசிய அளவில் ஒரு விவாதம் நடக்க வேண்டும். சனாதன தர்மத்தை எந்த வகையிலும் இழிவுபடுத்துவதற்கு விடகூடாது  அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.