மரணத்தால் மக்கள் நாயகன் ஆனார் - பிச்சைக்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட அயிரக்கணக்கானோர்

 
p

எங்கேனும் பிச்சைக்காரர் இறந்துவிட்டால் அவரது உடலை எடுத்துப் போடக் கூட யாரும் முன்வர மாட்டார்கள்.  நகராட்சி பணியாளர்கள்,  தூய்மை பணியாளர்களும் சென்றுதான் அந்த உடலை எடுத்து எரியூட்டு மையத்திற்கு கொண்டு செல்வார்கள்.  

இந்தநிலையில் ஒரு பிச்சைக்காரர் மரணம் அடைந்ததும் அவருக்கு இறுதிச் சடங்கு நடத்தி இருப்பதோடு இறுதி ஊர்வலமும் நடந்திருக்கிறார்கள்.   இறுதி ஊர்வலம் நடத்தியது கூட அதிசயம் அல்ல அந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருக்கிறார்கள்.  வாழ்நாள் முழுவதும் பிச்சைக்காரராக இருந்தாலும் மரணத்திற்குப் பின்னர் அவர் மக்கள் நாயகனாகி இருக்கிறார்.  கர்நாடக மாநிலத்தில் தான் இந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.

ப

 அம்மாநிலத்தில் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பசவா என்கிற ஹட்சா பாஸ்யா.   45 வயதான இந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டவர். நீண்டகாலமாக அதே பகுதியில் சுற்றி வந்த பசவா,  போவோர் வருவோரிடம்  யாசகம் கேட்டு வந்திருக்கிறார்.   அப்படி கிடைக்கும்  யாசகத்தை வைத்து தான் அவர் சாப்பிட்டு வந்திருக்கிறார்.   

 யாரிடமும் ஒரு ரூபாய்க்கு மேல் அவர் வாங்கியது இல்லையாம்.    யாசகம் கேட்கும் போது ஒரு ரூபாய்க்கு மேல் யாரும் கொடுத்தால் அதை வாங்க மறுத்து  வந்திருக்கிறார்.  இதனால் அவரை ஒரு ரூபாய் பிச்சைக்காரர் என்றே அழைத்து வந்திருக்கின்றனர் அப்பகுதி மக்கள்.    அவருக்கு யாசகம் கொடுப்பதால் தங்களுக்கு நல்லது நடக்கிறது என்று பலரும் நினைத்து வந்திருக்கின்றனர். 

பொது மக்கள் மட்டுமல்ல முன்னாள் துணை முதல்வர் எம்பி பிரகாஷ்,  முன்னாள் அமைச்சர் பரமேஸ்வர நாயக் ஆகியோரும் அந்த பிச்சைக்காரருக்கு யாசகம் கொடுப்பதால் தங்களுக்கு நன்மை நடக்கிறது என்று நம்பி வந்திருக்கிறார்கள்.  தங்களுக்கு கிடைத்த ஆசி என்று நினைத்து வந்திருக்கிறார்கள்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் திடீரென்று சாலை விபத்தில் உயிரிழந்து விட்டதால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  ஆயிரக்கணக்கானோர் திரண்டு அவருக்கு இறுதி ஊர்வலம் நடத்தி இருக்கிறார்கள்.