பட்டப்பகலில் கோயிலுக்குள் இளைஞர் வெட்டிக் கொலை! அதிரவைக்கும் சம்பவம்

 
பட்டப்பகலில் கோயிலுக்குள் இளைஞர் வெட்டிக் கொலை! அதிரவைக்கும் சம்பவம்

பட்டப் பகலில் பிரபல கோயிலுக்குள் வைத்து யல்லப்பா என்ற நபரை பீரப்பா என்ற நபர் சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Belagavi Murder in Temple premises Gokak Mamadapur san

கர்நாடக மாநிலம் பெல்காம்  மாவட்டத்தில் உள்ள கோகாக் தாலுகா மம்தாபூர் கிராமத்தில் வீரசித்தேஷ்வர் என்ற பிரபலமான கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குள் இன்று பட்டப் பகலில் பீரப்பா என்ற நபர் யல்லப்பா என்ற நபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கட்சியில் பதிவாகி உள்ளது. இருவருக்கும் இடையே இருந்த குடும்பப் பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பீரப்பா யல்லப்பாவை சரமாரியாக வெட்டும்போது அவர் தப்பி ஓட முயற்சித்தார் மேலும் கோயிலுக்குள் இருந்த நபர்கள் பீரப்பாவை தடுக்க முயற்சித்தனர். 

இருந்தபோதிலும் விடாமல் துரத்திச் சென்று யல்லப்பாவை வெட்டிக்கொலை செய்துள்ளார். கொலை நடந்த பிறகு கோவிலுக்குள் இருந்த நபர்கள் பீரப்பாவை பிடித்து கோவிலுக்குள் இருந்த தூணில் கட்டி வைத்து காவல்துறை வந்த பிறகு அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த கொலை விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.