வாலிபரிடம் இருந்து தப்பிக்க வீட்டில் தனியாக இருந்த சிறுமி எடுத்த விபரீத முடிவு

 

வாலிபரிடம் இருந்து தப்பிக்க வீட்டில் தனியாக இருந்த சிறுமி எடுத்த விபரீத முடிவு

பாலியல் பலாத்காரம் செய்யவந்த வாலிபரிடம் இருந்து தப்பிப்பதற்காக வீட்டில் தனியாக இருந்த சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் அவரது குடும்பத்தினருக்கு.

வாலிபரிடம் இருந்து தப்பிக்க வீட்டில் தனியாக இருந்த சிறுமி எடுத்த விபரீத முடிவு

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கொட்டை தாலுகாவில் உள்ள கிராமத்தில் 17 வயது சிறுமி பெற்றோர் வெளியே சென்றிருக்கும் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்து இருக்கிறார். அப்போது விஷத்தை குடித்துவிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார். வெளியே போய் விட்டு வீடு திரும்பிய பெற்றோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தன் மகளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

உடனே மகளை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர் . அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்தகுடி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் வீட்டில் நடத்திய சோதனையில் அச்சிறுமி தற்கொலைக்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சுப்பிரமணியா என்னை கற்பழிக்க முயன்றார். எப்படியோ அவரிடமிருந்து போராடி தப்பித்து ஓடி வந்துவிட்டேன். ஆனால் அவரது நண்பர்களிடம் அந்த சம்பவம் பற்றி சொல்லி வருகிறா. ர் இதனால் எனக்கு பெருத்த அவமானமாக இருக்கிறது. இதிலிருந்து நான் தப்பிக்க நினைக்கிறேன். அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் . என் மரணத்திற்கு சுப்பிரமணியாதான் காரணம். அவருக்கு தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் சுப்பிரமணியாவை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் தன்னை தேடுவது தெரிந்ததும் அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.