நம்பி வந்த மாணவி..! போதை ஊசி செலுத்தி பலாத்காரம் செய்த ஜிம் பயிற்சியாளர்..!

 
1
கான்பூர் அருகே உள்ள பசல்கஞ்ச் பகுதியில் ஜிம் ஒன்று உள்ளது. இந்த ஜிம்முக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவர் கடந்த 2021-ம் ஆண்டு சென்றுள்ளார். அந்த மாணவியிடம் ஜிம் பயிற்சியாளரான அர்ஜுன் சிங் என்பவர் நெருங்கிப் பழகி உள்ளார்.

அப்போது மாணவியிடம் தவறான நோக்கத்தில் பழகிய அர்ஜுன் சிங் மாணவியின் செல்போன் நம்பரை கேட்டுத் தொந்தரவு செய்துள்ளார்.

அப்போது மாணவி செல்போன் நம்பரை கொடுக்க மறுத்துள்ளார். ஆனாலும் ஜிம் உரிமையாளர்மூலம் மாணவியின் செல்போன் நம்பரை வாங்கிய பயிற்சியாளர் அர்ஜுன் சிங் மாணவிக்கு அடிக்கடி செல்போனில் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் அர்ஜுன் சிங் ஜிம்மில் வைத்து மாணவிக்குப் போதை மருந்தைக் கொடுத்து அவரைப் போதைக்கு அடிமையாக்கி உள்ளார். பின்னர் அடிக்கடி போதை ஊசி செலுத்தி மாணவியைப் பலமுறை பலாத்காரம் செய்ததோடு அதனை வீடியோ எடுத்துள்ளார்.

மேலும் வீடியோவைக் காட்டி மிரட்டி மாணவியைத் தனது வீட்டுக்கு வரவழைத்து அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களைக் கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் குடும்பத்தினர் கடந்த ஆண்டு போலீசில் புகார் செய்தனர். ஆனாலும் பயிற்சியாளர் அர்ஜுன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் அலகாபாத் ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, இது தொடர்பாகப் போலீஸ் கமிஷனர் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பயிற்சியாளரைக் கைது செய்துள்ளனர்.