5 நாட்களுக்குள் உங்க வீட்டை இடிங்க.. பா.ஜ.க.வின் மூத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பிய ஜம்மு மேம்பாட்டு ஆணையம்

 
நிர்மல் சிங்

5 நாட்களுக்குள் நீங்கள் சட்டவிரோதமாக கட்டிய வீட்டை இடிக்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் நிர்மல் சிங்குக்கு ஜம்மு மேம்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு அண்டு காஷ்மீரின் முன்னாள் துணை முதல்வர் மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர் நிர்மல் சிங். இவர் ஜம்முவில் சட்டத்துக்கு புறம்பாக வீடு ஒ்ன்றை கட்டியுள்ளார். இந்த வீட்டை 5 தினங்களில் இடிக்க வேண்டும் அல்லது எங்களது அமலாக்கப்பிரிவு அதனை செய்யும் என்று நிர்மல் சிங்குக்கு ஜம்மு மேம்பாட்டு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

பா.ஜ.க.

1988ம் ஆண்டு  கட்டிட செயல்பாட்டுக் கட்டுப்பாட்டுச் சட்டம் பிரிவு 7 (3)ன் கீழ் நிர்மல் சிங்குக்கு  ஜம்மு மேம்பாட்டு ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்டப்படி, நீங்கள் தகுதியான அதிகாரியிடம் இருந்து செல்லுபடியாகும் அனுமதி பெறவில்லை. ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து  5 நாட்களுக்குள் உங்கள் சொந்த மட்டத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானத்தை அகற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு மேம்பாட்டு ஆணையம்

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சட்டவிரோத கட்டுமானத்தை  அகற்ற தவறினால், ஜம்மு மேம்பாட்டு ஆணையத்தின் அமலாக்க பிரிவால் இடித்து அகற்றப்படும். அதற்கான செலவு நில வருவாய் நிலுவை தொகையாக உங்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.