வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய மாஜி முதல்வர் – அடிக்கடி இப்படி நடக்கிறதாம்-வைரலாகும் வீடியோ

 

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய மாஜி முதல்வர் – அடிக்கடி இப்படி நடக்கிறதாம்-வைரலாகும் வீடியோ

கர்நாடக சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்த கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது முன்னாள் முதல்வர் சித்தராமையா கேள்வி நேரத்தின்போது மைசூரில் கல்லூரி மாணவி கூட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து பேசினர்.

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய மாஜி முதல்வர் – அடிக்கடி இப்படி நடக்கிறதாம்-வைரலாகும் வீடியோ

மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வன்கொடுமை சம்பவம் குறித்து அவர் மெய்மறந்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவரது வேட்டி அவிழ்ந்து கீழே இறங்கி இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்திருக்கிறது. சித்தராமையா இதை கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் . அப்போது அதே வரிசையில் அமர்ந்திருந்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் இதை தவிர்த்து விட்டு சித்தராமையாவுக்கு சைகை மூலமாக சொல்லியிருக்கிறார். அதையும் சித்தராமையா கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

உடனே அவர் இருக்கையை விட்டு எழுந்து வந்து சித்தராமையாவின் காதில் வந்து உங்கள் வேட்டி அவிழ்ந்திருக்கிறது என்று சொல்ல, சட்டென்று இருக்கையில் அமர்ந்த சித்தராமையா, வேட்டியை சரி செய்துகொண்டே, என்னவென்றே தெரியவில்லை சமீப நாட்களாக இப்படித்தான் நடக்கிறது. என் வயிறு கொஞ்சம் பெரிதாகி விட்டது. கொரோனா வந்ததற்குப் பின் உடம்பு எடை 5 கிலோ வரைக்கும் கூடி விட்டது. அதனால் சில நேரங்களில் இப்படித்தான் நடக்கிறது என்று அமைச்சர் ஈஸ்வரப்பாவை பார்த்து சொன்னதும், அவையோர் சிரித்து விட்டனர் .

வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் பேசிய மாஜி முதல்வர் – அடிக்கடி இப்படி நடக்கிறதாம்-வைரலாகும் வீடியோ

அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், கட்சியின் மானம் போய் விடக்கூடாது என்பதற்காக உங்கள் காதில் வந்து ரகசியமாக சொல்லியிருக்கிறார் சிவக்குமார். ஆனால் நீங்கள் வேட்டி அழிந்துவிட்டது ஊருக்கே சொல்லி விட்டீர்களே. இதனால் அவரது முயற்சி ரொம்ப வீணாகப் போய்விட்டது என்று சொல்ல, அவையில் சிரிப்பலை எழுந்தன. இந்த வீடியோ சமூக வலைதளங்களிளும் தற்போது வைரலாகி வருகிறது.