பாம்பை பிடித்து அதன் வாயோடு வாய் வைத்து ரீல்ஸ்- நாக்கில் பாம்பு கொத்தி பலி
பாம்பை பிடித்து அதன் வாயோடு வாய் வைத்து ரீல்ஸ் எடுத்த இளைஞரின் நாக்கில் பாம்பு கொத்தியதால் விஷம் பரவி அதே இடத்தில் உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் தேசாய் பேட்டையில் பாம்பு பிடித்து குடும்பம் நடத்தி வருபவர் கங்காராம். கங்காராம் வாட்ஸ் குழுவிலும் சமூக வலைதளத்தில் பதிவு செய்ய 6 அடி நீளமுள்ள பாம்பை தனது மகன் சிவராஜுவிடம் கொடுத்துள்ளார். பின்னர் வீடியோவை எடுப்பதாக கூறி பாம்பை அவரது வாயில் வைக்கும்படி கூறியதால் சிவராஜுவும் பாம்பை வாயில் வைத்துள்ளார். உடனே பாம்பு சிவராஜூவின் நாக்கில் கடித்துள்ளது. உடனே விஷம் தலைக்கேறியதால் அவர் சிறிது நேரத்தில் இறந்தார்.
#JUSTIN பாம்பை பிடித்து அதன் வாயோடு வாய் வைத்து ரீல்ஸ் எடுத்த இளைஞர்; நாக்கில் பாம்பு கொத்தியதால் விஷம் பரவி அதே இடத்தில் உயிரிழந்தார் #Snake #Reels #News18tamilnadu | https://t.co/7dpn9FCtgj pic.twitter.com/w9QQYnWR4A
— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 6, 2024
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பாம்பை வாயில் வைக்கும்படி கூறி வீடியோ எடுத்த கங்காராமை கைது செய்த போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.