2 நாளில் 12 ஆயிரம் கேஸ்கள் திடீர் உயர்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா – 3ஆம் அலை தொடங்குகிறதா?

 

2 நாளில் 12 ஆயிரம் கேஸ்கள் திடீர் உயர்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா – 3ஆம் அலை தொடங்குகிறதா?

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை சின்னாபின்னாமாக்கியது. தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தை எட்டியது. உயிரிழப்பும் நான்காயிரத்தைத் தாண்டிச் சென்றது. அதற்குப் பிறகு பெரும்பாலான மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கு அஸ்திரத்தைக் கையிலெடுத்தன. தடுப்பூசி போடும் பணியையும் விரைவுப்படுத்தின. இதனால் ஓரளவு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. அப்படியே படிபடியாகக் குறைந்தது. இது மக்களுக்கு ஆறுதல் கொடுத்தது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

2 நாளில் 12 ஆயிரம் கேஸ்கள் திடீர் உயர்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா – 3ஆம் அலை தொடங்குகிறதா?

50 ஆயிரத்திற்கும் கீழே இறங்கி கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 42 ஆயிரம் கேஸ்கள் மட்டுமே பதிவாகியிருந்தன. இச்சூழலில் நேற்றும் இன்றும் திடீரென உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 50 ஆயிரம் கேஸ்கள் பதிவான நிலையில் இன்று 54 ஆயிரம் கேஸ்கள் பதிவாகியிருப்பது அபாயத்தை எழுப்பியுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. இந்தப் பாதிப்பு திடீரென உயர்ந்தது குறித்து மத்திய சுகாதாரத் துறை ஆய்வுசெய்து வருகிறது.

2 நாளில் 12 ஆயிரம் கேஸ்கள் திடீர் உயர்வு… மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் கொரோனா – 3ஆம் அலை தொடங்குகிறதா?

இதனிடையே நாட்டில் டெல்டாவிலிருந்து உருமாறி டெல்டா பிளஸ் கொரோனா பரவி வருகிறது. ஒருவேளை இந்த வைரஸ் தான் திடீர் பாதிப்புக்கு காரணமா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. அப்படியே இருந்தாலும் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் 40 பேருக்கு மட்டுமே டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஒருவேளை மூன்றாம் அலை வருவதற்கான அறிகுறியாக இந்தத் திடீர் உயர்வு இருக்குமா என்றும் ஆலோசிக்கப்படுகிறது.

முதல் அலை முடிந்த பிறகு இதேபோன்று தான் டெல்டா கொரோனா பரவியது கண்டறியப்பட்டது. அதேபோல குறைந்துகொண்டே வந்து திடீரென உயர்ந்தது. தற்போது இரண்டு நாட்களில் 12 ஆயிரம் கேஸ்கள் வித்தியாசத்தில் உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள ரவிக்குமார் எம்பி, “இந்திய அளவில் கொரோனா புதிய தொற்றின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களில் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது கவலைக்குரியது” என்று பதிவிட்டுள்ளார்.