டயர் வெடித்து லாரிக்கு அடியில் சிக்கிய கார்- 6 பேர் பலி
ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் கார் டயர் வெடித்து இஸ்கான் மையத்தின் சார்பில் நகர சங்கீர்த்தனை செய்து செல்லும் போது லாரி மீது மோதியதில் 6 பேர் இறந்தனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்திரியில் நகர சங்கீர்த்தனை மேற்கொள்ள அன்ந்தபுரத்தில் இருந்து ( அகில உலக கிருஷ்ண பக்திக் இயக்கம் ) இஸ்கான் சார்பில் சென்று பங்கேற்றனர். நிகழ்ச்சியை முடித்து கொண்டு மீண்டும் காரில் அனந்தபுரம் நோக்கி காரில் சென்றபோது ஷிங்கனமாலா மண்டலம், நயனப்பள்ளி கிராஸில் கார் டயர் வெடித்து கட்டுபாட்டை இழந்த கார் லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் லாரியில் அடியில் கார் சிக்கி அதில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


