பேஸ்புக் முதலீடு செய்த சரிகம நிறுவனத்தின் லாபம் ரூ.15 கோடியாக குறைந்தது…

 

பேஸ்புக் முதலீடு செய்த சரிகம நிறுவனத்தின் லாபம் ரூ.15 கோடியாக குறைந்தது…

நம்ம நாட்டில் மிகவும் பழமையான மியூசிக் லேபிள் நிறுவனமான சரிகம கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 மார்ச் காலாண்டில் சரிகம இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.14.84 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 10.33 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் காலாண்டில் சரிகம இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த நிகர லாபமாக ரூ.16.55 கோடி ஈட்டியிருந்தது.

பேஸ்புக் முதலீடு செய்த சரிகம நிறுவனத்தின் லாபம் ரூ.15 கோடியாக குறைந்தது…

கடந்த மார்ச் காலாண்டில் சரிகம இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் 14.27 சதவீதம் குறைந்து ரூ.108.66 கோடியாக சரிவடைந்துள்ளது. மேலும் அதே காலாண்டில் அந்நிறுவனத்தின் மொத்த செலவினம் 20.47 சதவீதம் சரிந்து ரூ.89.71 கோடியாக குறைந்துள்ளது. 2019-20 முழு நிதியாண்டில் சரிகம இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் சுமார் 20 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.43.50 கோடியாகவும், செயல்பாட்டு வாயிலான வருவாய் 4.26 சதவீதம் குறைந்து ரூ.521.47 கோடியாகவும் சரிவடைந்துள்ளது.

பேஸ்புக் முதலீடு செய்த சரிகம நிறுவனத்தின் லாபம் ரூ.15 கோடியாக குறைந்தது…

உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் அண்மையில் வெளியிடப்படாத ஒரு பெரிய தொகைக்கு சரிகம நிறுவனத்துடன் சர்வதேச உரிம ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் மூலம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாரகிராமில் சரிகம நிறுவனம் உரிமம் வைத்துள்ள வீடியோ பாடல்களை பயன்படுத்த முடியும். இதற்கு முன் சரிகம உரிமம் வைத்துள்ள பாடல்கள் வீடியோ வந்தால் அதை பேஸ்புக் நிறுவனம் பிளாக் செய்யும். தற்போதைய இந்த ஒப்பந்தத்தால் இனி பிளாக் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.