ஊழலுக்கு எதிராக நானும் கெலாட்டும் இணைந்து போராட வேண்டும் ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. சச்சின் பைலட்

 
சத்தியத்தை தொந்தரவு செய்யலாம், தோற்கடிக்க முடியாது…. பதவி பறிப்பு குறித்து சச்சின் பைலட்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் நானும் ஊழல் வழக்குகளுக்கு எதிராக ஒற்றுமையாக போராட வேண்டும் ஆனால் முதல்வர் ஊழல் வழக்குகளுக்கு எதிராக எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சச்சின் பைலட் குற்றம் சாட்டினார்.

ராஜஸ்தான் காங்கிரஸின் இளம் தலைவரும், அம்மாநில முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட், முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் போது நடந்த ஊழல் வழக்குகளில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான  அரசு செயல்படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரியும் கடந்த 11ம் தேதி முதல்  ஐந்து நாட்கள் அஜ்மீரிலிருந்து ஜெய்ப்பூர்  வரை ஜன் சங்கர்ஷ் யாத்திரை மேற்கொண்டுள்ளார். யாத்திரையின் 4வது நாளான நேற்று மக்கள் மத்தியில் சச்சின் பைலட் பேசுகையில் கூறியதாவது:

ஊழல்
நம்முடைய பிரச்சினைகள் இன்றியமையாதவை என்பதால் மக்களின் ஆதரவை பெறுகிறோம். முதல்வர் மாநிலத்தின் முகம், முதல்வர் அசோக் கெலாட் மற்றும் நானும் ஊழல் வழக்குகளுக்கு எதிராக ஒற்றுமையாக போராட வேண்டும். ஆனால் முதல்வர் ஊழல் வழக்குகளுக்கு எதிராக எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊழல் பிரச்சினைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீண்ட நாட்களாக கடிதம் எழுதி வருகிறேன். 

கட்சியின் முதுகில் குத்திவிட்டார்… சச்சின் பைலட் ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்.. அசோக் கெலாட் ஆவேசம்

கேள்வித்தாள் லீக் ஒரு தீவிரமான பிரச்சினை மற்றும் தீர்க்கப்பட வேண்டியிருப்பதால், முழு அமைப்பையும் மாற்றி அதை வெளிப்படையானதாக மாற்ற வேண்டும். ஊழலால் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்நாடகாவில் பொம்மை தலைமையிலான பா.ஜ.க. அரசு மீது நாங்கள் வைத்த குற்றச்சாட்டுகள் சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் கர்நாடகாவில் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.