சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு : கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன்  கோவில் திறப்பு : கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம்!

கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் 6 மாத காலத்திற்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன்  கோவில் திறப்பு : கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம்!

மலையாள மாதத்தின் துலாம் மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடையானது வரும் 21 ஆம் தேதி வரை திறந்திருக்கும். இதன் காரணமாக அஐயப்பன் கோவிலில் முதற்கட்டமாக தினந்தோறும் 250 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம். கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டிருந்த ஐயப்பன் கோவில் மீண்டும் திறக்கப்படுவது பகதர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் :

சபரிமலை ஐயப்பன்  கோவில் திறப்பு : கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம்!

1.சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொரோனா நெகட்டிவ் சான்று எடுத்துவருவது கட்டாயம்.

2.மணிமலையாறு, பம்பை, மீனச்சல் ஆறுகள், குளங்களில் குளிக்க தடை

3.ஊரடங்கு அமலில் உள்ளதால் ஐந்து பேருக்கும் மேல் பேட்டை துள்ளல், ஊர்வலம் செல்வது, வாகனங்களில் செல்வது போன்றவற்றுக்கு தடை

4.பக்தர்கள் எருமேலி, வடசேரிக்கரா ஆகிய பாதைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.