சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்தவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு!!

 

சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்தவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு!!

ஐதராபாத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு 10 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என ஹைதராபாத் போலீசார் அறிவித்துள்ளனர்.

சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்தவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சைதாபாத் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சிங்கிரேனி காலனியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமி சைத்ரா, வீட்டின் வெளியே விளையாடி கொண்டுருந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வந்த ராஜு (30) என்பவர் சிப்ஸ் வாங்கி தருவதாக, சைத்ராவை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார்.

விளையாட சென்ற சிறுமி வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி ராஜு வீட்டுக்கு சென்றது உறுதியானது. இதையடுத்து ராஜு வீட்டில் சோதனை நடத்திய போது சிறுமியின் உடல் படுக்கையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜு தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கூலி வேலை செய்துவரும் ராஜு மது அருந்தி தினந்தோறும் மனைவியை அடித்து வந்ததால் மனைவியும் , அவரது தயாரும் பிரிந்து சென்ற நிலையில் தனியாக சைக்கோ போன்று வசித்து வந்த ராஜு சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்த பிறகு தலைமறைவாகியுள்ளார். ராஜு மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலீசார் பத்து குழுக்களாக பிரிந்து ராஜுவை பிடிக்க தனிப்படை களமிறங்கியுள்ளது. ஹைதராபாத், நல்கொண்டா மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் தேடுதலை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் சிறுமி சைத்ராவை பாலியியல் வன்கொடுமைக்கு பிறகு கொலை செய்த ராஜு குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ .10 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஹைதராபாத் காவல்துறை ஆணையாளர் அஞ்சனிகுமார் அறிவித்துள்ளார். மேலும் ராஜுவின் புகைப்படம் சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.