தனித்தொகுதியில் போட்டியிட போலி சாதி சான்றிதழ்? – உச்ச நீதிமன்றத்தால் தப்பிய கருணாஸ் பட நடிகையின் எம்பி பதவி!

தனித்தொகுதியில் போட்டியிட போலி சாதி சான்றிதழ்? – உச்ச நீதிமன்றத்தால் தப்பிய கருணாஸ் பட நடிகையின் எம்பி பதவி!

மக்களவை தேர்தலின்போது போலி சாதி சான்றிதழைச் சமர்ப்பித்ததற்காக அமராவதி எம்பி நவ்னீத் கவுர் ராணாவுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மும்பை உயர் நீதிமன்றமத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டது. அந்தச் சான்றிதழை ரத்துசெய்துள்ள நீதிமன்றம் ஆறு மாதத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தது. அவர் எம்பி பதவியை இழக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

தனித்தொகுதியில் போட்டியிட போலி சாதி சான்றிதழ்? – உச்ச நீதிமன்றத்தால் தப்பிய கருணாஸ் பட நடிகையின் எம்பி பதவி!

தீர்ப்பு குறித்து அப்போதே பேசிய நவ்னீத், “இந்த நாட்டின் குடிமகளாக நீதிமன்றத்தின் உத்தரவை நான் மதிக்கிறேன். அதேசமயம், நான் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவேன். அங்கு எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார். அதேபோல அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்தது. இதனால் அவரின் பதவி தப்பியுள்ளது. ஆனாலும் வழக்கு விசாரணை முடியவில்லை என்பதால், இது தற்காலிக தடையாகவே கருதப்படும்.

தனித்தொகுதியில் போட்டியிட போலி சாதி சான்றிதழ்? – உச்ச நீதிமன்றத்தால் தப்பிய கருணாஸ் பட நடிகையின் எம்பி பதவி!

மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா மண்டலத்திலுள்ள இரண்டாவது பெரிய நகரம் அமராவதி. இது எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான தனித்தொகுதி. இந்தத் தொகுதியில் 2014ஆம் ஆண்டு சிவசேனா வேட்பாளர் ஆனந்த்ராவ் அதுசுல்லுடன் நவ்னீத் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஆனால் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் அதே ஆனந்த்ராவை எதிர்த்துப் போட்டியிட்டார். இம்முறை தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்டதால், ஆனந்த்ராவை தோற்கடித்து எம்பியானார்.

தனித்தொகுதியில் போட்டியிட போலி சாதி சான்றிதழ்? – உச்ச நீதிமன்றத்தால் தப்பிய கருணாஸ் பட நடிகையின் எம்பி பதவி!

நவ்னீத் போலி சாதி சான்றிதழைச் சமர்பித்து தனித்தொகுதியில் போட்டியிட்டார் என குற்றஞ்சாட்டி தோல்வியடைந்த ஆனந்தராவ் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார். நவ்னீத் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். அவர் லபானா சாதியைச் சேர்ந்தவர். ஆனால் அவர் பட்டியலினத்திற்குள் வரும் மோச்சி என்ற சாதியின் பெயரில் சாதி சான்றிதழை சட்டவிரோதமாக போலி ஆவணங்களைச் சமர்பித்து பெற்றிருக்கிறார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து ஜூன் 8ஆம் தேதி நாக்பூர் கிளை தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்புக்கே உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தனித்தொகுதியில் போட்டியிட போலி சாதி சான்றிதழ்? – உச்ச நீதிமன்றத்தால் தப்பிய கருணாஸ் பட நடிகையின் எம்பி பதவி!

இவரின் கணவர் பிரபல தெலுங்கு நடிகரான ரவி ராணா சினிமாவிலிருந்து ஒதுங்கி மகாராஷ்டிர அரசியலுக்குள் நுழைந்தார். 2009ஆம் ஆண்டு பத்னேரா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவானார். சினிமா நடிகையான நவ்னீத் விஜய்காந்த்துடன் அரசாங்கம், கருணாஸுடன் அம்பாசமுத்திர அம்பானி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பிலிருந்து விலகிய இவர் 2011ஆம் ஆண்டு ராணாவை திருமணம் செய்துகொண்டார். தனது கணவரின் அரசியல் செல்வாக்கை கொண்டு 2013ஆம் ஆண்டு போலி சாதி சான்றிதழை வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.