சாமானிய மக்கள் மீது பாயும் சட்டம் அதானி மீது பாயாதா? உடனே கைது செய்க- ராகுல்காந்தி

 
சாமானிய மக்கள் மீது பாயும் சட்டம் அதானி மீது பாயாதா? உடனே கைது செய்க- ராகுல்காந்தி

சிறையில் அடைக்கப்பட வேண்டிய அதானியை மத்திய அரசு பாதுகாக்கிறது என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

rahul


சூரிய சக்தி மின்சார ஒப்பந்தத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் அதானி உள்ளிட்ட 5 பேர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில், சட்டீஸ்கர், ஜம்மு கஷ்மீர், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஆந்திரா மாநில அரசுகளின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிடப்பட்டுள்ள காலத்தில், சட்டீஸ்கரில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக, ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஜம்மு கஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி உள்ளிட்டவை நடந்தது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “அதானி குற்றச்சாட்டுகளை ஏற்கப் போகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர் குற்றச்சாட்டுகளை மறுக்கத்தான் போகிறார். அதானி, அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டார். நாங்கள் முன்பு சொன்னது போல் அவரைக் கைது செய்ய வேண்டும் என்பதுதான் முக்கிய விஷயம். நூற்றுக்கணக்கான மக்கள் சிறிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் அமெரிக்காவில் பல ஆயிரம் கோடிக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த ஜென்டில்மேனை அரசு பாதுகாக்கிறது. அதானி கண்டிப்பாக சிறையில் இருக்க வேண்டும்” எனக் கூறினார்.