பிரதமர் விமானத்தில் கோளாறு எதிரொலி- ராகுல்காந்தி ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு

 
ராகுல்

ஜார்க்கண்ட் 2ம் கட்ட தேர்தல் பரப்புரைக்குச் செல்ல இருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஹெலிகாப்டரிலே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் காக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்கள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் 2ம் கட்ட தேர்தல் பரப்புரைக்குச் செல்ல இருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஹெலிகாப்டரிலேயே விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் காக்க வைத்தார். ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி தர தாமதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொள்ள ஹெலிகாப்டரில் கோடா பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல தயாராக இருந்த ராகுலை, 75 நிமிடங்கள் வரை காத்திருக்கவைத்தது அவருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நேர காத்திருப்புக்குப் பின் ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது. மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே இந்த நிலையா? என இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் வேதனை தெரிவித்துள்ளது

ஜார்க்கண்ட் மாநிலம் தியோரில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி காரணமாக ராகுல்காந்திக்கு அனுமதி தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.