‘ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா’..புதுச்சேரி சட்டப்பேரவை 31 ஆம் தேதி வரை மூடல்!

 

‘ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா’..புதுச்சேரி சட்டப்பேரவை 31 ஆம் தேதி வரை மூடல்!

புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் 3 நாட்கள் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொண்டதால், கடந்த 25 ஆம் தேதி சட்ட பேரவை கூட்டம் வழக்கமாக நடைபெறும் மைய மண்டபத்திலிருந்து தற்காலிகமாக வளாகத்தின் திறந்த வெளியில் நடந்து முடிந்தது. கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதையடுத்து காலவரையின்றி சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

‘ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா’..புதுச்சேரி சட்டப்பேரவை 31 ஆம் தேதி வரை மூடல்!

அதனைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் கலந்து கொண்ட புதுச்சேரி முதல்வர் உட்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சட்டப்பேரவை ஊழியர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக பேரவை செயலாளர் முனுசாமி அறிவித்துள்ளார்.