செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர்களை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய மோடி
செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற இந்திய அணியை, பிரதமர் மோடி அவரது டெல்லி இல்லத்திற்கு வரவைத்து பாராட்டினார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் ஸ்ரீநாத் நாராயணன், குகேஷ், பிரஜ்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் மற்றும் பெண்டாலா ஆகியோர் அடங்கிய ஆடவர் அணியும், அப்ஜித், திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், ஹரிகா துரோணவல்லி, தானியா , வைஷாலி ஆகியோர் அடங்கிய மகளிர் அணியும் பங்கேற்றது. இதில் ஆடவர் பிரிவில் 11 சுற்றுகள் முடிவில் இந்திய அணி 21 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தது.
#WATCH | Prime Minister Narendra Modi meets the Chess Olympiad winning team at his residence, in Delhi pic.twitter.com/7njupbpncK
— ANI (@ANI) September 25, 2024
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 2 தங்கம் வென்று அசத்திய இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, அணியில் உள்ள அனைத்து வீரர்களையும் டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்த மோடி, அவர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்து கொண்டார். அதுமட்டுமின்றி வீரர், வீராங்கனைகளிடம் போட்டி குறித்த அனுபவத்தை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுடன் செஸ் விளையாடி மகிழ்ந்தார்.