78வது சுதந்திர தினம் - மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..
டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
நாட்டின் 78 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டெல்லி செங்கோட்டை விழாக்கோலம் பூண்டுள்ளது. செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 10வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இன்று காலை 7.30 மணிக்கு 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றவுள்ளார். தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் அவர், பின்னர் நாட்டு மக்கள் மத்தியில் அவர் உரையாற்ற இருக்கிறார்.
சுதந்திர தின விழாவில் பங்கேற்க ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 40 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ட்ரோன்களை வீழ்த்தும் ராடர்கள், முகத்தை அடையாளம் காணும் சிறப்பம்சங்களுடன் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.