கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார் பிரதமர் மோடி – எப்போது?

 

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார் பிரதமர் மோடி – எப்போது?

பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் போட்டுக்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செயல்படுத்தப்படும் வரும் நிலையில், இரண்டாம் கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார்.

அந்த இரண்டாம் கட்டத்தில் பிரதமரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களுக்கு தடுப்பூசி மீதான அச்சத்தைப் போக்கும் வகையில் உலக நாடுகளின் தலைவர்கள் முதலாவதாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதனால் பிரதமர் மோடிக்கும் இந்த அழுத்தம் ஏற்பட்டது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார் பிரதமர் மோடி – எப்போது?

இருப்பினும், அவர் முதலமைச்சர்களுடன் கலந்துரையாடியபோது அரசியல் கட்சித் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முந்தக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார். ஏனெனில், முன்கள பணியாளர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று உறுதிப்பாட்டுடன் இருந்தார்.

அழுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ள இந்த முடிவை அவர் எடுத்தாரா அல்லது உண்மையிலேயே அவருக்கு முன்கள பணியாளர்களின் மீதான அக்கறையா என்று தெரியாமல் மக்கள் விழித்தனர். இதனிடையே, இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் திடீரென்று உயிரிழந்தார்கள். அவர்களின் இறப்புக்கு தடுப்பூசி காரணமில்லை என்றாலும், பிரதமருக்கு மேலும் அழுத்தம் கூடியது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கிறார் பிரதமர் மோடி – எப்போது?

இச்சூழலில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தலில் பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொள்வார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இன்னும் பிரதமர் அலுவலத்திலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

ஒருவேளை பிரதமர் முதற்கட்டத்திலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டால் மக்கள் மனதில் அச்சம் விலகி, விழிப்புணர்வு உண்டாகும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.