அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் நேற்று பதவியேற்றார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வெற்றிகரமான பதவிக்காலமாக அமைய வாழ்த்துக்கள் நெருங்கிய நண்பர் டிரம்ப் உடன் மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.