நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது - பிரதமர் மோடி

 
pm modi

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.  

மொராக்கோ நாட்டில் இன்று அதிகாலை 3:14 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் அங்கிருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி இதுவரை 296 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மராகேச் என்ற பகுதியில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு 6.8 என்ற  அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மொராக்கோவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிர் இழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது.